வியாழன், 1 ஜனவரி, 2015

தமிழ் முஸ்லிம் நூலகம் பற்றி

எல்லையில்லா அருளாளன் இணையில்லா அன்புடையோன்
அல்லாஹ்வின் திருப் பெயரால்...........
இனிய இணைய தள நேயர்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த
அஸ்ஸலாமு அலைக்கும்.
இணைய உலகில் இனிய தமிழில் கட்டுரைகள், கவிதைகள், மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களில் தங்கள் மனதைப் பறிகொடுத்த இணைய ஆர்வலர்களின் ஆவலைப்பூர்த்தி செய்யும் விதத்தில் இணையத்தில் காணக்கிடைக்கும் இஸ்லாமியத் தமிழ் நூற்களை ஒழுங்குப்படுத்தி ஒரு இணைய நூலகத்தை உருவாக்கினால் தமிழ் கூறு நல்லுகம் பயன்பெறும் என்னும் நன்னோக்கத்தில் இந்த 'தமிழ் முஸ்லிம் நூலகம்' என்னும் வலைப்பதிவு வடிவமைக்கப்பட்டுள்ளது.
தமிழ் இணைய உலகில் உலாவரும் தமிழ் நெஞ்சங்கள் இணையத்தில் தாம் காணும் தமிழ் நூற்களின் தொடுப்புகளை எமக்கு அனுப்பித் தந்தால் முறையாகப் பரிசீலிக்கப்பட்டு இஸ்லாமிய அடிப்படைக் கொள்கைகளுக்கு முரண்படாத நூற்கள் நன்றியுடன் எமது இவ்வலைப்பதிவில் வெளியிடப்படும்.
எழுதார்வமிக்க இளம் எழுத்தாளர்கள் தாங்கள் எழுதி பதிப்பிக்க இயலாத இஸ்லாமிய நூற்களை எமக்கு அனுப்பித்தந்தால் இணையத்தில் வெளியிட்டு கெளரவிக்க எமது 'தமிழ் முஸ்லிம் நூலகம்' தயாராக உள்ளது.
இஸ்லாம் குறித்த இன்பத் தமிழ் நூற்களை இணையத்தின் வாயிலாக இகமெங்கும் எடுத்துச் செல்வோம்.
தொடர்பு முகவரி: masdooka@gmail.com